background img

புதிய வரவு

திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க புதிய ஏற்பாடு

நகரி:ஆனந்த விமான கோபுரத்தில் அமைந்துள்ள, வெங்கடேச பெருமாளை பக்தர்கள் கோவில் பிரகாரத்திற்கு வெளியிலிருந்தபடி தரிசிக்கும் வசதியை ஏற்படுத்த, தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.திருமலையில் பக்தர் கூட்டம் மிகுந்த தினங்களில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று மூலவரான வெங்கடேச பெருமாளை தரிசிக்க முடியாமல், வெளியிலிருந்தபடி கோபுர தரிசனம் மட்டும் செய்து விட்டு திரும்புகின்றனர்.


இது போன்ற பக்தர்களை திருப்திபடுத்துவதற்காக, திருமலை கோவில் கருவறைக்கு மேற்பகுதியில் ஆனந்த விமான கோபுரத்தில் மூலவரான வெங்கடேச பெருமாளின் அவதாரம் போன்று சுயம்புவாக எழுந்தருளியுள்ள விமான வெங்கடேச பெருமாளை கோவிலுக்கு வெளியே இருந்து தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி, தர ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.ஆனந்த விமான கோபுரத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் மூலவரான ஏழுமலையானை தரிசித்ததற்கு சமம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவியுள்ளது.


விமான வெங்கடேச பெருமாளை தரிசித்தால் சகல பாவங்களும் விலகி போவதுடன் , பக்தர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பதும் ஐதீகம்.
திருமலை கோவிலின் வடக்குப் பகுதியில், கோவில் பிரகாரத்திற்கு வெளியே தெப்பக்குளம் அருகில், இதற்கு படிக்கட்டுடன் கூடிய மேடை போன்ற பிளாட் பாரம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது, வயது முதிர்ந்த, ஊன மற்ற பக்தர்களுக்காக நகரும் நடை மேடை வசதி உட்பட மேலும் சில வசதிகள் குறித்து, பக்தர்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து, பிப்ரவரி 4 ந்தேதி காலை 8.30மணி முதல் 10.30 மணி வரை பக்தர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். அதன் பின்னர் கோவிலுக்கு வெளியிலிருந்தபடி பக்தர்கள் விமான வெங்கடேச பெருமாளை தரிசிக்கும், புதிய வசதிக்கான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்படும் என, நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts