background img

புதிய வரவு

இந்தியாவுடன் உறவு வளர அமெரிக்கா விரும்புகிறது

வாஷிங்டன் : "இந்தியாவுடன் சர்வதேச மற்றும் கொள்கை ரீதியிலான நட்புறவை அமெரிக்கா விரும்புகிறது' என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறியுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலோனும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒபாமாவும் அங்கிருந்தார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேனன் - டோனிலோன் சந்திப்பின் போது அதிபரும் அதில் கலந்து கொண்டார். இந்தியா உடனான சர்வதேச ரீதியிலான நட்புறவு மற்றும் கொள்கை ரீதியிலான நட்புறவைப் பேண, அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்தார். இந்தாண்டில் நடக்க உள்ள இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இரு தரப்பிலான பொருளாதார உறவுகள், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts