background img

புதிய வரவு

30 ஜனவரி 2011 தின பலன்


மேஷம்
இன்றைய தினம் காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் கால் வலி, உடல் சோர்வு வந்து நீங்கும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சக ஊழியர்களால் இழப்புகள் ஏற்படும். உத்‌தியோகத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். மாலைப் பொழுதிலிருந்து குடும்பத்தில் அமைதி திரும்பும். அதி‌ர்ஷ்ட எண் : 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
 
 
ரிஷபம்
காலை 10.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதி‌ர்ஷ்ட எண் : 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
 
மிதுனம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்‌தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதி‌ர்ஷ்ட எண் : 1 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்
 
கடகம்
இன்றைய தினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தி‌ல் உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல் நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய‌த் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உதியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதி‌ர்ஷ்ட எண் : 2 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்
 
 
சிம்மம்
குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து போட்டியாளர்களை அதிரச் செய்வீர்கள். உத்‌தியோகத்தில் உங்களின் திறமையை மேலதிகாரி புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுது நீங்கும். அதி‌ர்ஷ்ட எண் : 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கரு நீலம், பிஸ்தா பச்சை
 
 
கன்னி
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்‌தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதி‌ர்ஷ்ட எண் : 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், சிவப்பு
 
 
துலாம்
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்‌தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதி‌ர்ஷ்ட எண் : 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
 
 
விருச்சிகம்
இன்றைய தினம் காலை 10.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்ந்தாலும் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலையிலிருந்து மனஉளைச்சல் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதி‌ர்ஷ்ட எண் : 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்
 
 
தனுசு
காலை 10.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதி‌ர்ஷ்ட எண் : 1 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை
 
 
மகரம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்‌கியம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதி‌ர்ஷ்ட எண் : 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு
 
 
கும்பம்
வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதி‌ர்ஷ்ட எண் : 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, இளஞ்சிவப்பு
 
 
மீனம்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்‌தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதி‌ர்ஷ்ட எண் : 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts