background img

புதிய வரவு

ஊழல் கண்காணிப்பு ஆணையர் தாமஸ் பதவி விலகுகிறார்

உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி தொடர்வதால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. .தாமஸ் இன்று பதவி விலகிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஊழல் குற்றச்சாற்றுக்குள்ளான தாமஸ் மத்திய ஊழல் கண்காணிகாப்பாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூவர் குழுவுக்கு, தாமஸ் மீதான ஊழல் குற்றச்சாற்றுக்கள் குறித்து முன்கூட்டியே தெரியுமா என்று நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தாம்ஸ் கேரளாவில் பணியாற்றியபோது,அவருக்கு எதிராக ஊழல் வழக்கில் குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தாமஸை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது தாமஸ் விடயத்தில் உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்த கருத்து குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி தொடர்வதால் தாமஸை பதவி விலகுமாறு மத்திய அரசு இன்று கேட்டுக்கொள்ளும் என்றும்,இதனால் அவர் இன்று பதவி விலகிவிடுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அநேகமாக தாமஸே குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று தமது பதவி விலகல் கடிதத்தை இன்று அளித்துவிடுவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts