background img

புதிய வரவு

நிரூபமா ராவ் இலங்கை பயணம் கண்துடைப்பு - நிதின் கட்கரி

தமிழக மீனவர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. கண் துடைப்பிற்காகவே நிரூபமா ராவ் இலங்கைக்குச் செல்கிறார். இதனால் எந்தப் யனும் ஏற்படாது என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி கூறினார்.

சென்னை வந்துள்ள நிதின் கட்கரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது. மீனவர்களை பாதுகாக்க‌த் தவ‌றிய மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மீனவர் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. ‌நி‌ச்சய‌ம் எழு‌ப்பு‌ம்.

இந்தியாவிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை சுட்டுக் கொல்கிறது. சிறிலங்க கடற்படையின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் தமிழர்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தமிழர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் சர்வதேச மனித உரிமை கழகத்தில் புகார் செய்வோம்.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன. உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. நிரூபமா ராவின் இலங்கைப் பயணம் வெறும் கண்துடைப்பு. இதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்று நிதின் கட்கரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts