2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவை பயன்படுத்தி, மக்கள் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்ததாக பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தமது கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா முக்கிய பங்கு வகித்தார் என்றால், முதலமைச்சர் கருணாநிதி அதற்கு மூளையாக செயல்பட்டார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி அதனை'அவுட் சோர்சிங்'காக (அயலாக்கம்) வழங்கியது.
2010 ஆம் ஆண்டு 2ஜி,காமன்வெல்த் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு ஊழல் மற்றும் போபர்ஸ் வழக்கு என ஊழல் ஆண்டாக ஆகிவிட்டது.
இந்த ஊழல்களின் மொத்த தொகை சுமார் 2லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு ஆகும்.
திமுகவை ஒரு வர்த்தக கடையாக (2ஜி ஊழல்) பயன்படுத்திக்கொண்டு மக்கள் பணத்தை காங்கிரஸ் கட்சி கொள்ளையடித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையில் பா.ஜனதாவே எந்த குற்றச்சாற்றையும் கூறவில்லை.மாறாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
0 comments :
Post a Comment