background img

புதிய வரவு

இந்தியர்கள் எகிப்திற்குச் செல்ல வேண்டாம் - மத்திய அரசு

எகிப்து அதிபருக்கு எதிராக அந்நாட்டில் ம‌க்க‌ள் கலவர‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு வருவதால் இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாராக், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, விலைவாசி போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இதனால் எகிப்து கலவர பூமியாக மாறியுள்ளது.

இதனையடுத்து, இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்திய அழைத்து வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts