திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கிடாத தி.மு.க. அரசை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டவலம் பேரூராட்சியில், அரசு ஒப்பந்த விதிமுறைகளை மீறி ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சிமெண்ட் சாலை பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்றும், அண்மையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம், வீட்டு வரி, குடிநீர் வரி, கட்டிட வரைபட அங்கீகார வரி ஆகியவற்றை மட்டும் உயர்த்தி விட்டதாகவும், வேட்டவலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களே இல்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வேட்டவலம் நகரத்தில் இயங்கி வந்த மின் கட்டண வசூலிப்பு மையம் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொரத்தூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டதன் காரணமாக மக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பேருந்து நிலையம் கட்டப்பட்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும், திருக்கோவிலூர் செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், குறித்த காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
எனவே, வேட்டவலம் பேரூராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிடாத மாநில அரசைக் கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் தேர்தல் பிரிவு இணைச் செயலர் பாலகங்கா தலைமையில் நாளை வேட்டவலம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment