
இதனால், தனது குழந்தைகள் மீது ஜூலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இவர்களை கொலை செய்ய அவர் திட்ட மிட்டார். அதற்காக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு 38 காலிடர் ரக துப்பாக்கியை விலைக்கு வாங்கினார். அதை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று குழந்தைகள் வழக்கம் போல் அவரை கேலி பேசி கிண்டல் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜூலி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதனால் பயந்த அவர்கள் வீட்டுக்குள் இருந்த அறைக்கு ஓடினார்கள். இருந்தும் விரட்டிச் சென்று அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றார்.
பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த ஜூலியின் தாயார் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே, அங்கு விரைந்து வந்த போலீசார் ஜூலியை கைது செய்தனர். போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை கேலி, கிண்டல் செய்த தனது குழந்தைகளை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment