ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சாற்றப்பட்டுள்ளவர்களில் 3 பேரின் வீடுகளில் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இன்று சோதனை நடத்தி வருகிறது.
கார்கில் போர் வீரர்களுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்தும், உறவினர்களுக்கு வீடுகள் ஒதுக்கியதாக எழுந்த புகாரை அடுத்தும் மகராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் பதவி விலகினார்.
இதனையடுத்து, இது தொடர்பாக முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்ளிட்ட 13 பேர் மீது ம.பு.க. நேற்று வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், வீட்டு வசதி வாரியப் பொதுச் செயலர் தாக்கூர், ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரி வாங்ச், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கித்வானி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ம.பு.க. இன்று சோதனை நடத்தி வருகிறது.

0 comments :
Post a Comment