background img

புதிய வரவு

(24 - 31 ஜனவரி 2011) வார பலன்


மேஷம்
எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். 10-ல் சூரியனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். புது வேலைக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. புதன் 26-ந் தேதி முதல் 10-ல் நுழைவதால் நண்பர்கள், உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். 28, 29 மற்றும் 30ந் தேதி காலை 10. 30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குரு 12-ல் மறைந்திருப்பதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கன்னிப்பெண்களே! கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். அதிரடி முடிவுகளால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 26, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு
ரிஷபம்
இடம், பொருள், ஏவல் அறிந்து எதையும் செய்யும் நீங்கள், யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வீடு, வாகன வசதிப் பெருகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்-. ஆனால் 30-ந் தேதி முதல் சுக்ரன் ராகுவுடன் சேர்வதால் உடல் நலத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். சூரியனால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். 5-ல் நிற்கும் சனியால் மனஇறுக்கம், பிள்ளைகளல் அலைச்சல் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். தொலை நோக்கு சிந்தனையுடன் செயல்படவேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 28, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பிங்க் அதி‌ர்ஷ்ட திசை : வடக்கு
 
மிதுனம்
சுயநலமில்லாத நீங்கள், சொந்தபந்தங்களை விட நட்பு வட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் 26-ந் தேதி முதல் ராகுவை விட்டு விலகி சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். பணம் வந்தாலும் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 6-ல் மறைந்து நின்று அலைச்சல், டென்ஷனை தந்து கொண்டிருக்கும் உங்கள் யோகாதிபதி சுக்ரன் 30-ந் தேதி முதல் 7-ல் அமர்வதால் இழுபறியான காரியங்கள் முடியும். சூரியன், செவ்வாயின் போக்கு சரியில்லாததால் மனஉளைச்சல், தாழ்வுமனப்பான்மை, தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வழக்கில் அவசரம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து முடிவுகளெடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே! ஆதாராமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்காதீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்‌தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினர்களே! அவ்வப்போது கிசுகிசுக்கள் வரும். அமைதி காக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு
 
கடகம்
மொழிப் பற்று அதிகமுள்ள நீங்கள், சுதந்திர மனப்பான்மை உள்ளவர்கள், சுகபோகங்களுக்கு அடிமையாக மாட்டீர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். 29-ந் தேதி வரை சுக்ரன் 5-ல் நிற்பதால் தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். 30-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் வாகன விபத்து, மனைவியுடன் வாக்குவாதம், வீண் செலவுகள் வந்துப் போகும். சூரியனால் முன்கோபம், கண் எரிச்சல், வயிற்று வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டு. கலைத்துறையினர்களே! வர வேண்டிய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இடைவிடாமல் போராடி இலக்கை எட்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 26, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், இளம்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு
சிம்மம்
சொல் ஒன்று செயல் வேறு என்றில்லாமல் சொன்னதை முடித்துக் காட்டும் சத்திய சீலர்கள் நீங்கள்தான். செவ்வாய் வலுவாக இருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதன் 26-ந் தேதி முதல் 6-ல் சென்று மறைவதால் நண்பர்களுடன் நெருடல்கள் வரும். 8-ல் குரு நிற்பதால் இனந்தெரியாத கவலைகள், வேலைச்சுமை, வீண் அலைச்சல் வந்துப் போகும். சாதுக்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமையை மேலதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். புது எண்ணங்கள் மனதில் மேலோங்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 28, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு
 
கன்னி
சிறுவயதிலேயே பலவித அனுபவங்களால் பக்குவப்பட்ட நீங்கள், பகைவரையும் நேசிப்பவர்கள். உங்களின் தனாதிபதி சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். 5-ல் செவ்வாயும், சூரியனும் நிற்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாய்வழியில் பிரச்னைகள் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ஜன்மச் சனி தொடர்வதால் முழங்கால் வலி, செறிமானக் கோளாறு வந்து நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் முழுமூச்சுடன் இறங்கி விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மேலதிகாரியுடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மன உறுதியால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 29 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், க்ரீம் வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : கிழக்கு
 
துலாம்
தன்கையே தனக்கு உதவி என்று வாழும் நீங்கள், நெஞ்சுறுதியுடன் பிரச்சனைகளை சந்திப்பவர்கள். பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்ந்த முற்படுவீர்கள். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சூரியன் 4-ல் நிற்பதால் வீண் டென்ஷன், மனஉளைச்சல், பார்வைக் கோளாறு வந்து நீங்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் பழி, எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள் வந்து விலகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மேலிடத்தைப் பற்றி விமர்சிக்காதீர்கள். கன்னிப்பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள். தூக்கமின்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுக்கப்பாருங்கள். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளை கடக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 28, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு
 
விருச்சிகம்
தெளிந்த நீரோடையைப் போல வெள்ளை மனசுள்ள நீங்கள், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் வல்லர்வர்கள். சூரியன், செவ்வாய், புதன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை கைக்கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது நிலம், வீடு வாங்குவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் அவ்வப்போது பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சாதுக்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்‌தியோகத்தில் உயர்பதவியில் அமர்வீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் புகழ் கூடும். ஈகை குணத்தால் எல்லோராலும் பாராட்டப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 26, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பழுப்பு அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு
 
தனுசு
ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்க வேண்டுமென நினைப்பீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சொந்த-பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பழைய இடத்தை நல்ல விலைக்கு விற்று புது வீடு வாங்குவீர்கள். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் வீண் டென்ஷன், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பேச்சில் காரம் வேண்டாம். கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவுக் கிட்டும். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 28, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், கிரே அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு
 
மகரம்
பாகுபாடு பார்க்காமல் உதவும் நீங்கள் பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி ஆனால் பல நேரங்களில் பாசமாகப் பேசுபவர்களிடம் ஏமாறுவீர்கள். குருபகவான் உங்கள் ராசிநாதனின் சாரத்தில் செல்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். புது வேலைக் கிடைக்கும். கடனாக கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். புது வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால் வீண் வாக்குவாதம், அடிவயிற்றில் வலி, காரியத் தாமதம் வந்துப் போகும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். ஆடை அணிகலன்கள் சேரும். வேற்று இனத்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்‌தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அலுத்துக் கொள்ளாமல் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு உழைக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 28, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு
 
 
 

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts