கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் படம் யுத்தம் செய். மிஷ்கின் படத்தை இயக்கியுள்ளார்.
யுத்தம் செய், தொடர் கொலைகள் செய்யும் ஒரு கொலைகாரனை சிபிசிஐடி போலீஸான சேரன் துப்பறிந்து கண்டுபிடிக்க முயல்வதை சித்தரிக்கிறது. நாட்டில் ஒரு கொலை நடந்தால் அதை இரண்டு நாள் நியூஸாக பாவித்து ஒவ்வொருவரும் கடந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பொறுப்பின்மை எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்படம் சொல்ல முயல்வதாக பேட்டியில் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
முக்கியமான வேடம் சேரனுக்கு. அவர்தான் படத்தின் நாயகன். அவருக்கு உதவியாளராக வருகிறார் தீபா ஷா. கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்துவும் படத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் படங்களில் தொடர்ந்து வரும் மஞ்சள் சேலை அணிந்த பெண்ணின் குத்துப் பாடலும், நடனமும் இதிலும் உண்டு. இதில் மஞ்சள் சேலை பாக்கியம் கிடைத்திருப்பது நீது சந்திராவுக்கு. அவருடன் இயக்குனர் அமீர் ஆடியிருக்கிறார். இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், யுகேந்திரன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
பி.சி.ஸ்ரீராமின் சீடர்களில் ஒருவரான சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். குறும்படங்கள் பலவற்றுக்கு இசையமைத்த கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். திரைப்படத்துக்காக அவர் தனது பெயரை கே என மாற்றியுள்ளார். கே என்பது காப்காவின் விசாரணை நாவலில் வரும் பிரதான கதாபாத்திரத்தின் பெயர்.
வரும் 4ஆம் தேதி யுத்தம் செய் திரையரங்குக்கு வருகிறது.
FILE |

0 comments :
Post a Comment