background img

புதிய வரவு

தாத்தா இறந்த துக்கத்திலும் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்!

இளம் நடிகர் ஒருவர் தாத்தா இறந்த துக்கத்திலும் தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய விவகாரம் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் உள்ளிட்ட இருபெரு தலைவர்களிடம் மேக்கப் மேனாக பல ஆண்டுகளா பணியாற்றியவர் பீதாம்பரம் கடந்த மாதம் 21ம்தேதி காலமானார். இவரது மகன்தான் டைரக்டர் பி.வாசு. இப்போது கோலிவுட் பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பவர் வாசுவின் மகனும், இளம் நடிகருமான ஷக்திதான்.

ஷக்திக்கு 23ம்தேதி பிறந்தநாள். தாத்தா இறந்ததற்கு அடுத்த 2வது நாள் பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஷக்தி. இதையொட்டி சென்னை நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கள்ளச் சிரிப்பழகா என்று ஷக்தியை அவரது ரசிகர்கள் அன்போடு வர்ணித்திருந்தனர். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் தலைப்பும் அதுதான். தாத்தாவுக்கு கண்ணீர் அஞ்சலி ‌செலுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர் பசை காய்வதற்குள்ளாகவே, பேரன் போஸ்டர் ஒட்டி பிறந்த நாள் கொண்டாடியிருப்பதை பார்த்து சிரிப்பதா? அழுவதா என்று அதிர்ந்து போயிருக்கிறது கோடம்பாக்கம்.

இது என் வேலை இல்லை ; ரசிகர்களின் வேலை என்று ஷக்தி இதற்கு விளக்கம் கொடுத்தாலும், நிஜம் என்னவென்று ‌விவரமறிந்த கோடம்பாக்கத்தார்களுக்கு தெரியாதா என்ன?

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts