background img

புதிய வரவு

தே.மு.தி.க விருப்ப மனு தாக்கல்: விஜயகாந்த் தொடங்கி வைத்தார்

தே.மு.தி.க. சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் திரண்டிருந்தனர். பொது தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனி தொகுதியில் போட்டியிட ரூ. 5 ஆயிரமும் கட்டணம் செலுத்தி மனு செய்தனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலை 11 மணி அளவில் தனது விருப்ப மனுவை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் வழங்கி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மற்ற நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். மனுக்கள் வாங்கு வதற்காக 5 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ், பொருளார் சுந்தர்ராஜ், தலைமை நிலைய செயலாளர் பார்த்த சாரதி, துணைச் செயலாளர் இளங்கோவன், தேர்தல் பிரிவு செயலாளர் வீரப்பன் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

விருப்ப மனு கொடுக்க வருகிற 6-ந்தேதி கடைசி நாளாகும். விருப்ப மனு கொடுக்க வந்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓட்டுப் பதிவு, வாக்கு எண்ணிக்கை இரண்டும் 13-ந்தேதி என்று வைத்துள்ளார்கள். இது ஒரு பேய் நம்பர், விலைவாசி உயர்வு பேய், ஊழல் பேய், ஆகியவற்றை விரட்டும் தருணம் இது என்றார். அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு முடிந்து விட்டதா? என்று கேட்டதற்கு எங்கள் குழு (தே.மு.தி.க. குழு) பேசும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts