background img

புதிய வரவு

அதிமுகவின் மோசடி வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்: கலைஞர்

கடந்த 5 ஆண்டுகள் சாதனைகளை தொடர்ந்து செயல்படுத்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு, முதல் அமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுகவின் மோசடி வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலையொட்டி முதல் அமைச்சர் கருணாநிதி தஞ்சை வல்லம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்துப் பேசிய முதல் அமைச்சர் கருணாநிதி,

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன், கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

அதிமுகவின் மோசடி வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். திமுக அரசின் ஐந்து ஆண்டு சாதணைகள் தொடர்ந்து செயல்படுத்திட திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து செங்கிப்பட்டி சென்றடைந்த முதல் அமைச்சர் கருணாநிதி, அங்கும் திமுக தொண்டர்கள் மத்தியில் பேசினார். பின்னர் திருச்சியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts