background img

புதிய வரவு

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி; ஷேவாக்குக்கு காயம்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இங்கிலாந்துடன் மோதிய 2-வது ஆட்டம் “டை”யில் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்துக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது “லீக்” ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளி பெற்றுள்ளது. இந்திய அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வருகிற 20-ந்தேதி எதிர் கொள்கிறது.

இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். கடந்த 2 தினங்களாக வீரர்கள் ஐ.ஐ.டி. மைதானத்தில் பயிற்சி பெற்றனர். இந்திய வீரர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர். நேற்றைய பயிற்சியின் போது கேப்டன் டோனி, அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஷேவாக்குக்கு முழங்காலில் காயம் இருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் அவர் பயிற்சி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் இன்று பிற்பகலில் பயிற்சி பெறுவார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts