background img

புதிய வரவு

“விவாகரத்துக்கு பின் நிறைய பட வாய்ப்புகள்” -சோனியா அகர்வால்

விவாகரத்துக்கு பின் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்கிறேன். சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் அதற்காக பொறுமையாகவும் கவனமாகவும் கேரக்டர்களை தேர்ந்தெடுக்கிறேன்.

இரண்டு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படங்கள் சிறந்த கதையம்சம் கொண்டவை. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. கவர்ச்சியை பொருட்டாக நினைக்கவில்லை. கதாநாயகியை முதன்மைபடுத்தும் படமாக இருந்தால் உடனே ஒப்புக் கொள்கிறேன்.

எல்லா கேரக்டர்களிலும் நடித்து பெயர் வாங்க வேண்டும். வானம் படம் தெலுங்கில் தயாரான போதே என்னை நடிக்க அழைத்தனர். சில பிரச்சினைகளால் நடிக்கவில்லை. தமிழ் பதிப்பில் நடிக்க இயக்குனர் கிரிஷ் அழைத்தார். உடனே ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts