ஆமதாபாத்: உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம்முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் கலக்கிய இந்திய அணி, அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது. வரும் 30ம் தேதி மொகாலியில் நடக்கும் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரண்டாவது காலிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
சேவக் வாய்ப்பு:
இந்திய அணியில் யூசுப் பதான் நீக்கப்பட்டு, மீண்டும் சேவக் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித்துக்கு பதிலாக டேவிட் ஹசி வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் அஷ்வின்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், ஹாடின் இணைந்து விவேகமான துவக்கம் தந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடந்த போட்டி போலவே இம்முறையும் முதல் ஓவரை வீச அஷ்வினை அழைத்தார் இந்திய கேப்டன் தோனி. இந்த ஓவரில் 3 ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். அடுத்த ஓவரில் ஜாகிர் கான் ஒரு ரன் கொடுக்க, ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அஷ்வின் பந்தில் "ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற வாட்சன்(25) பரிதாபமாக போல்டானார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து வந்த கேப்டன் பாண்டிங் "கம்பெனி கொடுக்க, தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஹாடின். இவர், முனாப் வீசிய 14வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். யுவராஜ் ஓவரில் பாண்டிங் 2 பவுண்டரி அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த ஹாடின்(53), யுவராஜ் சுழலில் சிக்கினார். மைக்கேல் கிளார்க்கும்(8), யுவராஜ் வலையில் விழுந்தார். மீண்டும் பந்துவீச வந்த ஜாகிர் கான், மைக்கேல் ஹசியை(3) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இப்படி இந்திய வீரர்கள் அபாரமாக பந்துவீச, ஆஸ்திரேலிய அணி 33.3 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து தவித்தது.
30வது சதம்:
இதற்கு பின் கேப்டன் பாண்டிங் பொறுப்பாக ஆடினார். யுவராஜ் வீசிய போட்டியின் 39வது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த இவர், தனது திறமையை நிரூபித்தார். கேமரான் ஒயிட்(12) ஏமாற்றினார். பேட்டிங் "பவர்பிளே ஓவர்களில் பாண்டிங்-டேவிட் ஹசி அதிரடியாக ரன் சேர்த்தனர். அஷ்வின் பந்தில் டேவிட் ஹசி ஒரு இமாலய சிக்சர்(85 மீ., தூரம்) அடித்தார். மறுமுனையில் அஷ்வின் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டி விட்ட பாண்டிங், ஒரு நாள் போட்டிகளில் தனது 30வது சதம் எட்டினார். இது உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். பின் அஷ்வின் பந்தை "ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற பாண்டிங் 104 ரன்களுக்கு(7 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(38), ஜான்சன்(6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஜாகிர், அஷ்வின், யுவராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சச்சின் அரைசதம்:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக், சச்சின் இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். சேவக் 15 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த காம்பிருடன் சேர்ந்து "சூப்பராக ஆடினார் அனுபவ சச்சின். இவர், ஜான்சன் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனது 94வது அரைசதம் கடந்த சச்சின்(53), டெய்ட் வேகத்தில் வீழ்ந்தார். விராத் கோஹ்லி(24) தாக்குப்பிடிக்கவில்லை. இதற்கு பின் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்த காம்பிர், அணிக்கு கைகொடுத்தார். அரைசதம் எட்டிய இவர் வீணாக 50 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அப்போது இந்திய அணி 33.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, தவித்தது.
யுவராஜ் ராசி:
போட்டியின் 38வது ஓவரை வீசிய பிரட் லீ அதிர்ச்சி கொடுத்தார். இவரது வேகத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(7) அவுட்டானார். பின் யுவராஜ், சுரேஷ் ரெய்னா சேர்ந்து துணிச்சலாக போராடினர். பிரட் லீ ஓவரில் யுவராஜ் 2 பவுண்டரி, ரெய்னா 1 பவுண்டரி அடிக்க, ஒட்டுமொத்தமாக 15 ரன்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து டெய்ட் ஓவரிலும் 13 ரன்கள் கிடைக்க, இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி தணிந்தது. அபாரமாக ஆடிய யுவராஜ் இத்தொடரில் தனது 4வது அரைசதம் அடித்தார். இது ஒரு நாள் அரங்கில் இவரது 49வது அரைசதம். இவர் அரைசதம் அடித்தால், இந்தியாவின் வெற்றி உறுதி என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. மறுபக்கம் பிரட் லீ பந்தில் ஒரு சிக்சர் அடித்த ரெய்னா, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார். பிரட் லீ பந்தில் யுவராஜ் ஒரு "சூப்பர் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 261 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. யுவராஜ் 57(8 பவுண்டரி), ரெய்னா 34(2 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தனர்.
இவ்வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. கடந்த 1999ல் இருந்து உலக கோப்பை அரங்கில் மிரட்டி வந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம், இம்முறை காலிறுதியுடன் முடிவுக்கு வந்தது.
மீண்டும் "ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடம்
இந்தியாவுக்கு எதிரான காலிறுதியில் 118 பந்தில் 104 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக கோப்பை அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (6 சதம்) உள்ளார்.
---
தோனி "100
நேற்று கேப்டனாக தனது 100வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார் இந்தியாவின் தோனி. விக்கெட் கீப்பர் ஒருவர் 100 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டது இதுவே முதன்முறை.
---
சச்சின் 18 ஆயிரம் ரன்கள்
ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், 45வது ரன்னை எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 451 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48 சதம், 94 அரைசதம் சேர்த்து, அதிக ரன்கள் எடுத்துள்ளவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில்( 18,008 ரன்கள்) உள்ளார். இரண்டாவது இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா(444 போட்டி, 13, 428 ரன்கள்) இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்(359 போட்டி, 13, 288) உள்ளார்.
ஸ்கோர்போர்டு
ஆஸ்திரேலியா
வாட்சன்(ப)அஷ்வின் 25(38)
ஹாடின்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 53(62)
பாண்டிங்(கே)ஜாகிர்(ப)அஷ்வின் 104(118)
கிளார்க்(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 8(19)
மைக்கேல் ஹசி(ப)ஜாகிர் 3(9)
ஒயிட்(கே)+(ப)ஜாகிர் 12(22)
டேவிட்-அவுட் இல்லை- 38(26)
ஜான்சன்-அவுட் இல்லை- 6(6)
உதிரிகள் 11
மொத்தம் (50 ஓவரில் 6 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-40(வாட்சன்), 2-110(ஹாடின்), 3-140(கிளார்க்), 4-150(மைக்கேல் ஹசி), 5-190(காமிரான் ஒயிட்), 6-245(பாண்டிங்).
பந்துவீச்சு: அஷ்வின் 10-0-52-2, ஜாகிர் கான் 10-0-53-2, ஹர்பஜன் சிங் 10-0-50-0, முனாப் படேல் 7-0-44-0, யுவராஜ் சிங் 10-0-44-2, சச்சின் 2-0-9-0, விராத் கோஹ்லி 1-0-6-0.
இந்தியா
சேவக்(கே)மைக்கேல் ஹசி(ப)வாட்சன் 15(22)
சச்சின்(கே)ஹாடின்(ப)டெய்ட் 53(68)
காம்பிர்-ரன் அவுட்(ஒயிட்/டேவிட் ஹசி) 50(64)
கோஹ்லி(கே)கிளார்க்(ப)டேவிட் ஹசி 24(33)
யுவராஜ் சிங்-அவுட் இல்லை- 57(65)
தோனி(கே)கிளார்க்(ப)பிரட் லீ 7(8)
ரெய்னா-அவுட் இல்லை- 34(28)
உதிரிகள் 21
மொத்தம் (47.4 ஓவரில் 5 விக்., ) 261
விக்கெட் வீழ்ச்சி: 1-44(சேவக்), 2-94(சச்சின்), 3-143(விராத் கோஹ்லி), 4-168(காம்பிர்), 5-187(தோனி).
பந்து வீச்சு: பிரட் லீ 8.4-1-45-1, டெய்ட் 7-0-52-1, ஜான்சன் 8-0-41-0, வாட்சன் 7-0-37-1, கிரெஜ்ஜா 9-0-45-0, கிளார்க் 3-0-19-0, டேவிட் ஹசி 5-0-19-1.

0 comments :
Post a Comment