background img

புதிய வரவு

இரண்டாவது குழந்தை பிறந்ததால் நடிப்புக்கு முழுக்கு; சினிமா தயாரிப்பில் சிம்ரன்

பிரபல நடிகை சிம்ரன். இவர் நடித்த நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் சில மாதங்கள் தங்கினார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக்காள், அண்ணி வேடங்களில் நடித்தார். 2009-ல் அவர் கடைசியாக நடித்த “ஐந்தாம் படை” படம் ரிலீசானது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் பங்களா வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது.

இதற்கிடையில் சினிமாவுக்கு நிரந்தர முழுக்கு போட சிம்ரன் முடிவு செய்துள்ளார். அடுத்து சினிமா தயாரிப்பில் இறங்குகிறார். இதற்காக புது படக்கம்பெனி துவங்குகிறார். அவர் தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஏப்ரலில் துவங்குகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts