background img

புதிய வரவு

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து நடிகர் கார்த்திக் கட்சி விலகல்

சென்னை: ""கேட்ட தொகுதிகளை தராததால், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறோம்,'' என, நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அ.தி.மு.க.,வின் பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் என்னை சந்தித்து, அ.தி.மு.க.,வுடன் எங்கள் கட்சி கூட்டணி குறித்து பேசினர். அப்போது, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதால், எங்களுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவடையவில்லை. அ.தி.மு.க., பிரதிநிதிகள் என்னை கேட்டுக் கொண்டதற்கிணங்க, கடந்த ஜனவரி 19ம் தேதி, அ.தி.மு.க., பொதுச் செயலரை நேரில் சந்தித்துப் பேசி, ஆதரவு கடிதம் கொடுத்தேன். அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் பா.ம.க., கூட்டணியிலிருந்து விலகியது. நான் நியாயமாக கோரியிருந்த தொகுதிகளை கேட்டதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, இன்று வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில், அவர்கள் பேச்சில் கூட்டணிக்கு உகந்த நோக்கம் இல்லாதது தெளிவாகத் தெரிந்தது. அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது. கூட்டணியிலிருந்து விலகுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அறிக்கையில் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts