background img

புதிய வரவு

ரூ.122 கோடி வரிபாக்கி: ஜெகன்மோகனுக்கு நோட்டீஸ்

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.122 கோடி வரி செலுத்த கோரியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி வெளியேறினார். கடந்த வாரம் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி துவக்கினார். இக்கட்சி துவங்கி ஆர்ப்பாட்டங்கள் ஓய்வதற்கு முன்பு ரூ.122 கோடி வரி செலுத்தும்படியும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் "ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஜகதி பப்ளிகேஷன்' சாக்ஷி என்ற பெயரில் தெலுங்கு பத்திரிகையும், இதே பெயரில் தெலுங்கு "டிவி' சேனலும் நடத்தி வருகிறது. 2008 - 2009ம் ஆண்டில் வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்த கணக்கில் ரூ.19 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக, இந்த பப்ளிகேஷன் அறிவித்திருந்தது. 2010, மார்ச் 9ல் இந்த தகவல்களின் அடிப்படையில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது வருமான வரித்துறையிடம் இந்த பப்ளிகேஷன் முறையான கணக்குகளை ஒப்படைக்காதது தெரிய வந்தது. இதன் அடிப்டையில் ரூ.122 கோடி வரி செலுத்தும்படி கடந்த 2010, டிசம்பர் 31ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் வரி செலுத்தும்படியும், கணக்கில் வராத முதலீடுகளுக்கு விளக்கம் கேட்டும் ஜெகன்மோகனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை கூறுகையில், "இது தொடர்பாக பதில் அளிக்க சம்பந்தப்பட்டவர்கள் அவகாசம் கேட்டுள்ளனர்' என்று தெரிவித்தது. ஜெகன்மோகன் தரப்பில், "வருமானம் ரூ.500 கோடியாக இருக்கும் என எதிர்பார்த்து கடந்தாண்டு செப்டம்பர் மாதமே வருமான வரித்துறைக்கு அட்வான்சாக ரூ.80 கோடி வரி செலுத்தப்பட்டு விட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts