தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா கொடநாடு சென்றுவிடுவார் என்று, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 25.03.2011 அன்று பிரச்சாரத்தை துவங்கிய மு.க.ஸ்டாலின், மானாமதுரை தொகுதி வேட்பாளர் தமிழரசியை ஆதரித்துப் பேசினார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் நிறைவேற்றுவோம் என நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். நிறைவேற்றுவீர்கள் என்று அங்கு கூடியிருந்தவர்கள் குரல் எழுப்பினர்.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், இந்த நம்பிக்கையோடு திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். உலகத்தில் வேறு எங்கும் இல்லாத வீடு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி முதல் அமைச்சர் கருணாநிதி சாதனை படைத்துள்ளார்
ஆட்சிக்கு வரபோவதில்லை என்ற தைரியத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா காப்பி அடித்துள்ளார். 2 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதா, இப்போது அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன். திருமண உதவித் திட்டத்தை நிறுத்திய ஜெயலலிதாவை யாரும் நம்ப வேண்டாம். தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா கொடநாடு சென்றுவிடுவார் என்றார்.

0 comments :
Post a Comment