background img

புதிய வரவு

அ.தி.மு.க - தி.மு.க., இரண்டுமேஊழல் பங்குதாரர்கள்:சுப்பிரமணின்யசாமி "சுர்ர்ர்' பேட்டி

அதிரடி அரசியலுக்கு, "பேர் பெற்ற' ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி. எப்போது கேட்டாலும், தடாலடி செய்திகளை, "ஸ்டாக்' வைத்திருப்பவர். இட்லிக்கடை பிரச்னையாகட்டும், ஹார்வர்டு பல்கலை பாடமாகட்டும், ஒரே மாதிரியான தீவிரத்தோடு அணுகுபவர். அவர் அளித்த பேட்டி:இத்தனை ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறீர்கள். உங்களால் தனி அணி அமைக்க முடியவில்லையே...!நான், தனி அணி அமைத்து களம் காண்பதற்காக பாடுபடவில்லை. அரசியலில், சமூகத்தில், தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக போராடுகிறேன்.ஸ்பெக்ட்ரம் ஊழல் முதல், பலப்பல ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது நீங்கள். அதன் பயனை, மற்றவர்கள் அறுவடை செய்கிறார்களே...
நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? பயனை அறுவடை செய்பவர்கள் வெட்கம் இல்லாமல், அதைச் செய்கின்றனர். நான் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பணியைச் செய்கிறேன். அதற்கு மீடியாக்காரர்களாகிய நீங்களும் ஒரு காரணம். நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுகிறீர்கள். எங்களைப் பற்றி, நான் சொல்வதில் உள்ள உண்மைகளைப் பற்றி எங்கு செய்தி வெளியிடுகிறீர்கள்?யார் நல்லது செய்கின்றனர் என்பதை உங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் தானே மக்களுக்கு விளங்கும்.நான் ஏதாவது சொன்னால், அதை ஜோக்காக எடுத்துக் கொள்கிறீர்கள். அப்படி இருக்கும்போது எப்படி எங்களுக்கான பயனை நாங்கள் அறுவடை செய்ய முடியும்? இருப்பினும் நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஊழல் இருக்கக் கூடாது, தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்கான என் பணி தொடர்ந்து கொண்டிருக்கும். பயனை அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செயல்படவில்லை.
சோனியாவின் சுவிஸ் வங்கி கணக்கு பற்றி பல நாட்களாகச் சொல்லி வருகிறீர்கள். இது பற்றிய பிரச்னையில், சோனியாவிடம் அத்வானி வருத்தம் தெரிவித்துள்ளாரே...இது அத்வானியிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் என் நிலையில் தெளிவாக உள்ளேன். நான் சொல்வதை, என் நிலையை, இப்போதும், எப்போதும் என்னால் தெளிவாக்க முடியும்.இந்தத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன? எதை முன் வைத்து பிரசாரம் மேற்கொள்வீர்கள்?நாங்கள் இந்தத் தேர்தலில் ஐந்து முக்கிய அம்சங்களை முன் வைத்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். அதில் முக்கியமானதாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை, தமிழகத்தில் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பது, ஆன்மிகம் மற்றும் தேசிய உணர்வுகளின் அடிப்படையில் பொருளாதார ஏற்றத்தை உண்டாக்குவது, தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தமிழர்களுக்கு நியாயம் வழங்குவது, கோவில் நிர்வாகத்தை அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது ஆகியவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்டு, இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம்.எங்கள் வேட்பாளர்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஊழல் ஒழிப்பதே தலையாய பணியாக இருக்கும். அவர்கள் அரசுக்கு வளைந்து கொடுக்க மாட்டார்கள். இப்போது நாங்கள் கஷ்டப்பட்டு போராடி ஒழிக்கும் ஊழலை, அப்போது எளிதாகச் செய்வோம்.
இந்தத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஏன் ஓட்டு போடக் கூடாது?அவர்கள் ஊழலின் வடிவமாக இருப்பதால், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக் கூடாது.அப்படியானால், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடலாமா?அவர்களும் ஊழலின் பங்குதாரர்களாக உள்ளனர். அதனால் அவர்களுக்கும் ஓட்டு போடக் கூடாது.உங்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்?அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும், இரண்டு கட்சிகளும் ஒருவரிடம் மற்றொருவர் பங்கு பெற்றுக் கொள்கின்றனர். அதனால் அத்தகைய கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது. நாங்கள் அமைத்துள்ள பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, தாமரைச் சின்னத்திற்கு ஓட்டளித்தால், மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மாநிலத்தில் நல்லதொரு ஆட்சியை ஏற்படுத்த முடியும். அதனால், எங்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் ஓட்டு போட வேண்டும்.
""ஊழல் இருக்கக் கூடாது, தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்கான என் பணி தொடர்ந்து கொண்டிருக்கும். பயனை அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செயல்படவில்லை!''

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts