"சென்னை போயஸ் கார்டனில் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக, ஜெயலலிதாவின் போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும், நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். தனிநபர் உரிமைகளை பறிக்கும் செயல்களில் இறங்கியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது பார்லிமென்ட் வளாக அலுவலகத்தில், தம்பிதுரை தலைமையில் நேற்று அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்துப் பேசினர்.அப்போது ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் போன் டேப் செய்யப்படுவது குறித்தும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.உள்துறை அமைச்சகத்தை கலந்து ஆலோசிக்காமலும், உரிய அனுமதி பெறாமலும் ஜெயலலிதாவின் போன் டேப் செய்யப்படுகிறது. இது மனித உரிமை மீறலாகும். இது தொடர்பாக ஜெயலலிதா வீட்டு பி.எஸ்.என்.எல்., போனையோ அவரது மொபைல் போனையோ ஒட்டுக் கேட்கக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்; இதற்கான உத்தரவையும் உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் போனை டேப் செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயலலிதா வீட்டுக்கு செல்லும் சாலை ஓரத்திலேயே மொபைல் வேனை நிறுத்திக் கொண்டு, அந்த பகுதிகளில் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இது, தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் செயல். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.எம்.பி.,க்கள் குழுவில், மைத்ரேயன், செம்மலை உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.-நமது டில்லி நிருபர்-

0 comments :
Post a Comment