background img

புதிய வரவு

ராஜ்யசபா உறுப்பினராகஹேமமாலினி தேர்ந்தெடுப்பு

பெங்களூரு:கர்நாடகாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பழம்பெரும் நடிகை ஹேமமாலினி தேர்ந்தெடுக்கப்பட்டார்.கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவின் ஒரு இடத்துக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி வெற்றி பெற்றார். இவருக்கு, 106 ஓட்டுகள் கிடைத்தன. இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் - ம.ஜ.த., ஆதரவு வேட்பாளர் மருள சித்தப்பா, 94 ஓட்டுகள் பெற்றார். மொத்தம் 205 ஓட்டுகள் பதிவானது. ஐந்து ஓட்டுகள் செல்லாதவை.ஹேமமாலினி வெற்றி பெற்றதையடுத்து, பா.ஜ.,வினர் அவருக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இவருக்கு 110 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து உள்ளதாக, தான் சமர்ப்பித்த கணக்கில் கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts