background img

புதிய வரவு

ஜெயலலிதா உருவ பொம்மை எரிப்பு வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ம.தி.மு.க. மிகுந்த கண்ணியத்தையும் அமைதியான போக்கையும் கடை பிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து, கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறேன். இத்தகைய செயல்களில் கழக தோழர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவும் வலியுறுத்தி வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் வைகோ கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts