background img

புதிய வரவு

வீடியோ கான்பரன்சிங்கில் கோளாறு: ஆ.ராசா கோர்ட்டில் ஆஜர் 31-ந்தேதிவரை காவல் நீடிப்பு

வீடியோ கான்பரன் சிங்கில் கோளாறு ஏற்பட்டதால் ஆ.ராசா உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களது காவல் 31-ந்தேதிவரை நீடிக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் 4 பேரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 4 பேருக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறையில் இருந்தவாரே காவல் நீடிப்பு வழங்கப்பட்டு வந்தது.

நேற்று இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்த செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் வீடியோகான் பரன்சிங் முறையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஆ.ராசா உள்பட 4 பேரும் டெல்லி பாட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் செல்வாக்குமிக்கவர்கள், அவர்களை விடுவித்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே அவர்களின் காவலை நீடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து 4 பேரின் நீதிமன்றக் காவலையும் வருகிற 31-ந்தேதி வரை நீடித்து நீதிபதி உத்தர விட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts