அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. ம.தி.மு.க.வுக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வுக்கு 16 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்றும் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இடதுசாரிகளுடனும் அ.தி.மு.க.வுக்கு சமரசம் ஏற்பட்டு உள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகள் விரும்பும் தொகுதிகளை கொடுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. சில குறிப்பிட்ட தொகுதிகளை வலியுறுத்தி கேட்டு வருகிறது. அது தொடர்பாக இன்று பிற்பகல் வரை பேச்சு வார்த்தை நீடித்தது. இன்று மாலை அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு முழுமையாக முடிவு செய்யப்பட்டு ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

0 comments :
Post a Comment