background img

புதிய வரவு

மாயாவதியின் ஒருமாத பாதுகாப்பு செலவு ரூ.200 கோடி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக, சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மாயாவதியின் பாதுகாப்பிற்கு மட்டும் ரூ.200 கோடி செலவழிக்கப்பட்டு இருப்பதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கடந்த ஒரு மாதமாக 72 மாவட்டங்களில் மறு ஆய்வு சுற்று பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இவரது பயணம் முடிந்தது. இந்நிலையில், நேற்று அம்மாநில கவர்னர் பி.எல். ஜோஷியை சந்தித்து அரை மணி நேரம் மாயாவதி பேசினார். இச்சந்திப்பின் போது அம்மாநில அமைச்சரவை செயலர் ஷஷாங் சேகர் சிங் உடனிருந்தார். இச்சந்திப்பு பற்றி கவர்னர் மாளிகை அளித்த பதிலில், "மாநில கவர்னர் மற்றும் முதல்வரின் சந்திப்பு வழக்கமான மரியாதை நிமித்தமான ஒன்று' என்று தெரிவித்துள்ளது. சுற்று பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் மாயாவதி, 72 மாவட்டங்களின் நிலை குறித்து கவர்னரிடம் கருத்துக்களை பரிமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகிலேஷ் பிரதாப் சிங் கூறுகையில், "உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் சுற்று பயண பாதுகாப்பிற்கு மட்டும் ரூ. 200 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. அரசின் தவறான நடவடிக்கைகளை மக்களின் மனதில் இருந்து திசை திருப்ப பயணம் மேற்கொண்டுள்ளார். அரசின் உண்மை நிலவரத்தை சொல்ல விடாமல் தடுக்க சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவரை சந்திக்க முயற்சித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பயணத்தின் போது இவர் பேசியவை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டவை. பகுஜன் சமாஜ் கட்சி ஏழை மக்களுக்கு உழைக்கும் கட்சி அல்ல. சுயநலத்திற்கு உழைக்கும் கட்சி என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்' என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts