background img

புதிய வரவு

கருணாநிதி அப்செட்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்களால், தி.மு.க., வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது. தி.மு.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய நேற்று காலை மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதி நேற்று மாலையே வீடு திரும்பினார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டார். சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள சாதிக் பாட்சாவின் தற்கொலை சம்பவம், தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள, "கலைஞர் டிவி' அலுவலகத்தில் சி.பி.ஐ., திடீர் சோதனை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் நடந்துள்ளது, சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என தி.மு.க., தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த அதிர்ச்சிக்கிடையே, அ.தி.மு.க., போட்டியிடும் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று மாலை திடீரென அறிவித்தார். ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டியிட உள்ளதாகவும், மதுரையில் நாளை (வெள்ளி) ஜெயலலிதா, பிரசாரத்தை துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக, நேற்று காலை மாமல்லபுரம் சென்ற முதல்வர் கருணாநிதிக்கு இந்த இரு தகவல்களும் தெரிவிக்கப்பட்டதால் அவர், "அப்செட்' ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை அவர் தனது கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பி, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts