background img

புதிய வரவு

5 மாநிலத்தில் முதல்வர் : காங்கிரஸ் குழப்பம்

புதுடில்லி : சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில், காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடிக்கிறது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளாவில், ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல், திராவிட கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், பல ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளே தொடர்ந்து ஆட்சியில் உள்ளதால், அங்கும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. கேரளாவைப் பொறுத்தவரை, இடதுசாரிகளும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வருகின்றன. அதே நேரத்தில், புதுச்சேரியிலும், அசாமிலும் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., கட்சி சார்பில், முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிப்பீர்கள் என, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில், "சில மாநிலங்களைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. மற்ற மாநிலங்களில், இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது' என்றார்.

இருப்பினும், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காங்., சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில், அக்கட்சியில் குழப்பமே நீடிக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts