background img

புதிய வரவு

இந்தியா திணறல் வெற்றி! * காலிறுதிக்குள் நுழைந்தது * நெதர்லாந்து போராட்டம் வீண்

புதுடில்லி: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,
நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை
உலக கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
* இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42 போட்டி) உள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:
ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---
ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி: 1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்), 5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்), 9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.
இந்தியா
சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts