background img

புதிய வரவு

228 தொகுதிகளில் திரிணமுல் போட்டி: காங்., கலக்கம்

புதுடில்லி : மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் அதிரடியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து, தொடர்ந்து பேச்சு நடத்தி வந்த திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 228 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களின் பெயர்களை, தன்னிச்சையாக அறிவித்தார்.

தமிழகத்தை போலவே, மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை, கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்தது. இதில் இரு தரப்புக்கும் இடையே சுமுக முடிவு எட்டப்படவில்லை.இந்நிலையில், 228 தொகுதிகளுக்கான, தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, மம்தா பானர்ஜி நேற்று தன்னிச்சையாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகளை மட்டுமே, அவர் விட்டுக் கொடுத்துள்ளார். மற்றொரு கூட்டணி கட்சியான "சுசி'க்கு இரண்டு தொகுதிகளை கொடுத்துள்ளார். தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், மம்தா பானர்ஜி தன்னிச்சையாக தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டதால், காங்கிரஸ் கட்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்," காங்கிரசுடன் நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை தொடர்ந்து பேச்சு நடத்தியபின்னரே, எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன்' என்றார்.

காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஷகில் அகமது, "கட்சி மேலிடம் முடிவு செய்யும். மம்தா தந்த 64 இடங்களில் போட்டியா அல்லது 294 தொகுதிகளிலும் போட்டியா என்பது முடிவாகும்' என்றார்

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts