background img

புதிய வரவு

கதாநாயகியை இன்று அறிமுகப்படுத்துகிறார் கருணாநிதி

சென்னை : தி.மு.க., தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்துகிறார். கடந்த தேர்தலின் போது தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலவச டி.வி., 1 ரூபாய் அரிசி என ஏராளமான சலுகைகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தல் அறிக்கை தி.மு.க., வெற்றிக்கு பெரிதும் உதவியதால் அதனை கதாநாயகன் என்று கட்சியினர் வர்ணித்தனர். வெற்றி பெற்ற பின்னர் முதல்வரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சலுகைகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிலையில் இன்று வரும் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தி.மு.க., வெளியிடவுள்ளது. இது பற்றி முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அளித்த பேட்டியில், கடந்த தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருந்ததைப் போல இந்த தேர்தல் அறிக்கை "கதாநாயகியாக" இருக்கும் என்று கூறியிருந்தார். அதன் படி இன்று முதல்வர் வெளியிட இருக்கும் தேர்தல் அறிக்கை, கடந்த அறிக்கையைப் போல எக்கச்சக்க சலுகைகளுடன் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் தேர்தல் அறிக்கையை கதாநாயகி என கூறியிருப்பதால் பெண்களுக்கு அதிக அளவில் சலுகைகள் மற்றும் வாக்குறுதிகள் அறிவிக்கப்படலாம் என்று தி.மு.க., வினர் பேசிக்கொள்கின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts