background img

புதிய வரவு

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரியில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு; 30 மாணவிகள் காயம்

பாகிஸ்தானில், வட மேற்கு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெஷாவர் அருகேயுள்ள மார்தான் என்ற இடத்தில் பெண்கள் கல்லூரி உள்ளது. துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகளுடன் தலிபான் தீவிரவாதிகள் அங்கு புகுந்தனர்.அவர்களை பார்த்ததும் அலறியடித்த படி மாணவிகள் ஓடினர். இந்த நிலையில் மாணவிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.மேலும் கையெறி குண்டுகளையும் வீசினர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.தீவிரவாதிகள் வெறியாட்டத்தில் 30 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மார்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே, சிகிச்சை பெற்ற மாணவிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts