புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நேற்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்தும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைப்பது குறித்தும், அரபு நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் விவாதித்தார். இவர்களது உரையாடல் 40 நிமிடங்கள் நீடித்ததாக, ஜனாதிபதி மாளிகை தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment