background img

புதிய வரவு

கருணாநிதி ரூ.50 கோடி - ஜெயலலிதா ரூ.51 கோடி: 5 ஆண்டுகளில் சொத்து 3 மடங்காக உயர்வு

சென்னை: முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கலின் போது, தங்கள் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்ததை விட, இப்போது இருவருக்கும் மூன்று மடங்கு அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

கருணாநிதி: முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரங்களில் தன் பெயரில் உள்ள பணம் கையிருப்பு அசையும், அசையா சொத்துக்கள், தன் மனைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை காட்டியுள்ளார். ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த கடனை ராஜாத்தி மற்றும் கனிமொழியிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்தாண்டு வருமான வரித்துறைக்கு வழங்கிய கணக்கின்படி, கருணாநிதிக்கு 37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. தயாளுக்கு 64 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், ராஜாத்திக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. மற்ற அசையும், அசையா சொத்துக்களையும் சேர்த்து 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகளையும் தனது சொத்தாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. ஆனால், அவற்றின் மதிப்பை குறிப்பிடவில்லை. போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத், கோட நாடு சொத்துக்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவிடம் இருக்கும் சொத்துக்கள் என்ன? அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு, 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று மனு தாக்கல் செய்தார். அவர் அளித்த தனது சொத்து விவரம் வருமாறு:

அசையும் சொத்துக்கள்

1. கையிருப்புத் ரொக்கம்- 25,000 ரூபாய்
2. பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டிபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டிபாசிட் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இவை சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
3. பாண்டுகள், கம்பெனிகளில் பங்கு முதலீடு-50,000 ரூபாய். இவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது.
4. சொந்தமான வாகனங்களில் மொத்த மதிப்பு 8.35 லட்சம் ரூபாய்.
5.நிறுவனங்களில் முதலீடுகள் விவரம்:
* ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ்-8.5 கோடி ரூபாய்.
* சசி எண்டர்பிரைஸஸ்-75 லட்சம் ரூபாய்.
* கோட நாடு எஸ்டேட்-1 கோடி ரூபாய்.
* ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட்-65 லட்சம் ரூபாய் உட்பட நிறுவனங்களில் முதலீட்டின் மொத்த மதிப்பு 10.9 கோடி ரூபாய். அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979 ரூபாய்.

அசையாச் சொத்துக்கள்

1. வேளாண் நிலம்:
* ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
* செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
* 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
* 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
* ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
* எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.
3.குடியிருப்பு கட்டடங்கள்:
* 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.
கடன் இல்லை
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.
அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மொத்த மதிப்பு 51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 ரூபாய் .

கருணாநிதியின் சொத்து மதிப்பு: திருவாரூர் தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தலைவர் கருணாநிதி வேட்பு மனு தாக்கலின் போது, வெளியிடப்பட்ட சொத்து பட்டியல் விவரம் வருமாறு: கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு பெயரில் 30 ஆயிரம் ரூபாய், மற்றொரு மனைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது. வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய், கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய். கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.

அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.

அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேப் போன்று துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய். ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts