background img

புதிய வரவு

என் மூடுக்கு தகுந்த மாதிரியான கணவர் வேணும் : அசின்

என் மூடுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குற கணவர்தான் வேண்டும் என்று அசின் கூறியிருக்கிறார். கோலிவுட், பாலிவுட் என மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை அசின், அளித்துள்ள பேட்டியில், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகணும் என்று ஆசைப்பட்டேன். படிப்புல நான் ரொம்ப கெட்டி. எப்படியோ நடிகை ஆயிட்டேன். இப்போது இந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன், என்று கூறியுள்ளார். திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், அது நடக்கும்போது நடக்கும். எனக்கு கணவராக வரக்கூடியவர் முதலில் என்னை காதலிக்கணும். என்னோட கனவுக் காதலன், என் மூடுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். நான் அப்செட்டா இருந்தா அவர் என்னை தனிமையில் விடணும். நான் சந்தோஷமா இருந்தா அதை அவர் கொண்டாடணும். மற்றபடி என் சமையலை ஏத்துக்கறவரா இருந்தா இன்னும் நல்லது, என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, இங்கிலீஷ், பிரெஞ்ச் ஆகிய 7 மொழிகள் பேசும் அசின் இப்போது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி மொழிகளையும் கற்றுக் கொண்டிரக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts