சிம்பு - அனுஷ்கா ஜோடி நடித்துள்ள வானம் பட இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்காவை புகழ்ந்து தள்ளினார் நடிகர் சிம்பு. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சிம்பு தற்போது வானம் படத்தில் நாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் எவன்டி உன்னப் பெத்தான்... எனத் தொடங்கி தொடரும் ஒரு பாடலை எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுஒருபுறம் இருக்க தடபுடலாக இசை வெளியீட்டு விழாவை நடத்தி முடித்திருக்கிறார் சிம்பு. இசை வெளியீட்டு விழாவில் வானத்தை வெளியிடும் கிளவுட் நைன் மூவிஸ் தயாநிதி அழகிரி, சிம்பு, அனுஷ்கா, தயாரிப்பாளர்கள் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ், பரத், சோனியா அகர்வால், சரன்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, டைரக்டர் வெற்றிமாறன், வானம் டைரக்டர் கிரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிம்பு அனுஷ்காவை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளினார். இந்த படத்தின் டைரக்டர் கிரிஷ் 10 கவுதம் மேனன், 20 பாலாவுக்கு சமம். ஏனென்றால் அவரை சிபாரிசு செய்தவர் அனுஷ்கா. இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ரீ-மேக்தான் வானம். தெலுங்கில் நாயகியாக அனுஷ்காதான் நடித்திருந்தார். கிரிஷ் இயக்கியிருந்தார். படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்ததுமே கதாநாயகியாக அனுஷ்காவையே நடிக்க வைக்க முடிவு செய்தோம். அனுஷ்கா சிபாரிசின் பேரில் நானும், தயாரிப்பாளர் கணேசும் டைரக்டர் கிரிஷை அழைத்து பேசினோம். 10 நிமிடங்கள்தான் பேசினோம். அந்த பத்து நிமிடமும் வேதம் படத்தில் அவர் செய்த தவறுகளை மட்டுமே பேசினார். அந்த கதையில் எந்த அளவுக்கு அவருக்கு ஈடுபாடு இருந்தால், செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவார் என்று கருதி, அவரையே டைரக்டராக ஒப்பந்தம் செய்தோம், என்று கூறியதுடன், அனுஷ்கா நல்ல நடிகை; சூட்டிங் நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார், என்றும் கூறினார் சிம்பு.

0 comments :
Post a Comment