background img

புதிய வரவு

காங்கிரஸ் வேட்பாளர்தோல்வி: ஜெகன் காரணம்

ஐதராபாத்:ஆந்திராவில் நடந்த மேல்சபை தேர்தலில், ஜெகன் மோகன் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சி மாறி ஓட்டளித்ததால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.ஆந்திராவில் எம்.எல்.ஏ., கோட்டாவின் கீழ், பத்து மேல்சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில், தங்களிடம் உள்ள மொத்த எம்.எல்.ஏ.,க்களை கணக்கில் கொண்டு, ஐந்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்களான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 26 பேர், கட்சி மாறி ஓட்டளித்தனர். இதனால், காங்கிரஸ் சார்பில் நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ஐந்தாவது வேட்பாளரான முகமது ஜனி என்பவர் தோல்வி அடைந்தார்.
ஜெகன் ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எம்.ஐ.எம்., கட்சி சார்பில் போட்டியிட்ட முகமது ரிஜ்வி என்பவருக்கு ஓட்டளித்ததால், அவர் எளிதாக வெற்றி பெற்றார். ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெகன் மோகனின் உத்தரவுப்படியே, அவர்கள், காங்கிரசுக்கு எதிராக ஓட்டளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts