சென்னை:"ம.தி.மு.க.,விற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில், தொண்டர்கள் ஈடுபட்டது கண்டனத்திற்குரியது' என்று, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கை:ம.தி.மு.க., சட்டசபைத் தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தையில், மிகுந்த கண்ணியத்தையும், அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து, மக்கள் மத்தியில் ம.தி.மு.க.,விற்கு நல்லெண்ணத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர்.இந்நிலையில், தாம்பரம் மற்றும் தேனி மாவட்டத்தில் நான்கு, ஐந்து பேர், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களில், தொண்டர்கள் இனி ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment