background img

புதிய வரவு

தோல்வியே காணாத கருணாநிதி

அரசியல் வாழ்க்கையில், 11 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தற்போது சொந்தத் தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, திருவாரூர் மக்கள் மேலும் ஒரு சாதனைப் பரிசு தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., துவங்கிய பின், 1957ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கருணாநிதி, இதுவரை, 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஐந்து முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். தமிழகத்தையே ஆண்டாலும், சொந்தத் தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை.அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

24ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.கடந்த 1957 முதல் 2006 வரை கருணாநிதி, 11 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984ல் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை நடந்த தேர்தல்களில் போட்டியிட்ட ஆண்டு, தொகுதி, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர், வித்தியாச ஓட்டுக்கள் (எதிர் வேட்பாளர் வாங்கிய ஓட்டு எண்ணிக்கை) விவரம் வருமாறு:

*1957 ஆண்டு, குளித்தலை, காங்., வேட்பாளர் தர்மலிங்கம், 8,296 ஓட்டு வித்தியாசம்.
*1962 தஞ்சாவூர் காங்., வேட்பாளர் பரிசுத்த நாடார், 1,928 ஓட்டு வித்தியாசம்.
*1967 சைதாப்பேட்டை, காங்., வேட்பாளர் வினாயகமூர்த்தி, 20,482 ஓட்டு வித்தியாசம்.
*1971 சைதாப்பேட்டை, காங்., வேட்பாளர் காமலிங்கம், 12,511 ஓட்டு வித்தியாசம்.
*1977 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, 16,438 ஓட்டு வித்தியாசம்.
*1980 அண்ணாநகர், அ.தி.மு.க., வேட்பாளர் ஹெச்.வி.ஹண்டே, 699 ஓட்டு வித்தியாசம்.
*1989 துறைமுகம், முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.ஏ.வகாப், 31,991 ஓட்டு வித்தியாசம்.
*1991 துறைமுகம், காங்., வேட்பாளர் கே.சுப்பு, 890 ஓட்டு வித்தியாசம்.
*1996 சேப்பாக்கம், காங்., வேட்பாளர் நெல்லைக்கண்ணன், 35,784 ஓட்டு வித்தியாசம்.
*2001 சேப்பாக்கம், காங்., வேட்பாளர் தாமோதரன், 4,834 ஓட்டுவித்தியாசம்.
*2006 சேப்பாக்கம், சுயேச்சை வேட்பாளர் தாவுத்மியான்கான், 8,526 ஓட்டு வித்தியாசம்.
*2011 திருவாரூர், என்ன ஆகும்?

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts