background img

புதிய வரவு

சோனியா நாடு திரும்பினார்:மே.வங்கத்தில் இன்று முக்கிய முடிவு

கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி இன்று முக்கிய முடிவு எடுக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரசும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரசுடனான தொகுதி பங்கீடு விவகாரம் முடிவடையாத நிலையில், மம்தா பானர்ஜி, தன்னிச்சையாக தனது கட்சி சார்பில் போட்டியிடும் 228 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு, 64 தொகுதிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சியினர் ஏற்காவிட்டால், அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்றும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, மம்தா தங்களுக்கு கொடுத்துள்ள 64 தொகுதிகளை ஏற்பதா, வேண்டமா என்பது பற்றி கட்சி நிர்வாகிகள் ஆலோசித்தனர்.
இதன் பின், மம்தா பானர்ஜியை சந்தித்து, தங்கள் தரப்பு கருத்தை வலியுறுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று இரவு நாடு திரும்பினார்.அவரிடம் இந்த பிரச்னை குறித்து விளக்கவும், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே, தொகுதி பங்கீடு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts