background img

புதிய வரவு

சொத்து விவரம் தராதவர்கள் : நடவடிக்கை எடுக்கிறார் நிதிஷ்

பாட்னா : கடந்த 28ம் தேதிக்குள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, பீகார் மாநில அரசு பரிசீலித்து வருகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாரதிய ஜனதா கூட்டணி அரசு உள்ளது. பொது வாழ்வில் ஊழலை வேரறுக்க வேண்டும் என்பதில், அந்த அரசு உறுதியாக உள்ளது. இதனால், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் 28 அமைச்சர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்தனர். இதேபோல், மாநில அரசு ஊழியர்களும், உயர் அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை கடந்த பிப்ரவரி 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, பீகார் மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று 329 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 241 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் விரைவில் பீகார் மாநில அரசின் வெப்சைட்டில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 88 சதவீத ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள ஊழியர்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை; இவர்களில் ஐந்து பேர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். சொத்துக் கணக்கு சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பீகார் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts