background img

புதிய வரவு

தேர்தல் களத்தில் பலமான எதிரி வேண்டும்: அ.தி.மு.க. கூட்டணி குழப்பத்தால் மகிழ்ச்சி அடையவில்லை; மு.க.ஸ்டாலின் பேச்சு

சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத்தின் முப்பெரும் விழா தியாகராய நகரில் அவ்வியக்கத்தின் தலைவர் லியாகத்அலிகான் தலைமையில் நடந்தது. அன்பு செரீப், கே.ஏ.நாகூர் மீரான் வரவேற்றனர். விழாவில் துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் ஓர் காவியம் என்ற நூலை வெளியிட்டார்.லியாகத் அலி கான் பெற்றுக் கொண்டார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

சிறுபான்மை சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார். ஜெயலலிதா தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று கூறுகிறார்.

இது மைனாரிட்டி மக்களுக்கு பாடுபடும் அரசாக உள்ளது. எனவே அவர் மைனாரிட்டி அரசு என்று பேசுவதால் வருத்தம் இல்லை. இந்த அரசை தேர்தலில் மக்கள் மெஜாரிட்டியாக மாற்ற வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும்.சிறுபான்மை மக்கள் பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது.உலமாக்கள் நல வாரியமும் அமைக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். அ.தி. மு.க கூட்டணியின் குழப்ப நிலைப்பற்றி நிருபர்கள் முதல்வரிடம் கருத்து கேட்ட போது குழப்பத்தை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார். அந்த மன நிலையில் நாம் இருக்கிறோம்.

தேர்தல் களத்தில் பலம் வாய்ந்த எதிரி இருக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமும் சுறு சுறுப்பும் ஏற்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். நிர்வாகிகள் வி.ராமலிங்கம், முகமது யாசின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts