background img

புதிய வரவு

தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது; சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் நடை பெற்றது. கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும் டைரக்டருமான சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் புதிய மாற்றம் தொடங்கி இருக்கிறது. சாதிக்காக, மதத்துக்காக, கூடிய தமிழர்கள் இன்று தமிழ் என்ற பொது இனத்துக்காக கூட தொடங்கி உள்ளனர். இது காலம் கடந்து நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த உணர்வு ஏற்பட்டிருந்தால் இலங்கையில் தமிழீழம் மலர்ந்திருக்கும். அங்குள்ள லட்சக்கணக்கான தமிழர்களை காப்பாற்றி இருக்க முடியும்.

இதை உணர்ந்து செய்வதறியாமல் நிர்கதியாக நிற்கும் தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காகவே நாம் தமிழர் கட்சி உள்ளது. மாற்றத்துக்கு நாம் தயாராக வேண்டும். எகிப்தும், லிபியாவும் நமக்கு உணர்த்துவது இதைதான். ஈழத்தில் தமிழர்களின் அழிவுக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். கற்ற தமிழை விற்றுப் பிழைக்கின்ற வியாபாரிகள், சுயமரியாதை, தன்மானம் குறித்து பேசக்கூடாது. அதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

இவ்வாறு சீமான் பேசினார்.

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர்கள் ஞானசம்பந்தன், செந்தில்குமார், மாவட்ட தலைவர் மாணிக்கம், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கார்வண்ணன், மக்கள் ஜனநாயக கட்சி அஸ்லாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts