ஸ்தல வரலாறு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஸ்ரீரமணா ஆசிரமத்துக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கும் அருகில் ஸ்ரீவனதுர்கையம்மன் ஆலயம் உள்ளது. முன்னொரு காலத்தில் காடாக திகழ்ந்த இந்த மலையடிவாரப் பகுதியில், குளம் வெட்டும் பணி நடைபெற்றபோது, பூமியில் இருந்து அழகிய துர்கை விக்கிரகம் கிடைத்தது.
வனப் பகுதியில் கிடைத்ததால் அம்மனுக்கு ஸ்ரீவனதுர்கை என்று பெயர் சூட்டினார்கள். பிறகு அந்த இடத்தில் கோவிலும் கட்டி ஊர்மக்கள் வழிபட ஆரம்பித்தனர். திருவண்ணாமலையில், முன்பு ஒரு காலத்தில் முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். ஒருநாள், அந்த வழியே வந்த அரக்கன் ஒருவன், முனிவரின் தவத்தைத் கலைத்தான்.
அவரைக் கொல்ல முயன்றான். அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்த முனிவர், மானாக உருமாறினார். பிறகு வேகமாக ஓடி மலையடிவாரத்தை அடைந்து ஸ்ரீவனதுர்க்கை அம்மனிடம் சரணடைந்தார். தேவியும் அரக்கனை அழித்து முனிவரைக் காப்பாற்றினாள் என்கிறது ஸ்தல வரலாறு.
இன்றும், பக்தர்களுடைய துயரங்களையெல்லாம் போக்கி அருள்மாரி பொழியும் இந்த அம்மனை, கிரிவலத்துக்கு வரும் லட்சோப லட்சம் மக்கள் வழிபட்டு பயன் பெறுகிறார்கள் என்பது கண் கூடான உண்மை. கிரிவலத்துக்கு தவறாமல் செல்பவர்களுக்கு இது புரியும்.
கேட்டதெல்லாம் தரும் கற்பகவிருட்சகமாக திகழும் ஸ்ரீவதுர்க்கையை கருணைத் தெய்வம், தாயினும் நல்லாள் எனப்போற்றுகின்றனர் கிரிவலபக்தர்கள். இவளை வழிபட, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடையாமல் கலங்கித் தவிப்பவர்கள் வெள்ளிக்கிழமை.
அமாவாசை அல்லது பவுர்ணமி தினத்தில் இங்கு வந்து அம்மனை தரிசித்து, எலுமிச்சை மாலை அணிவித்து, 48, எலுமிச்சை தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட கல்யாண வரம் வேண்டும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய மாப்பிள்ளையும், திருமணம் தள்ளிப்போகும் ஆண்களுக்கு நல்ல மணப்பெண்ணும் அமைவார்கள்.
அண்ணாமலையை கிரிவலம் வரும் எண்ணற்ற பக்தர்கள், ஸ்ரீவனதுர்க்கையின் அருளை அறிந்து ஆலயத்துக்கு வந்து எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டுப் பலன் பெறுகின்றனர். திருமண வரம், பிள்ளை பாக்கியம், உடல் ஆரோக்கியம் ஆகிய பிராத்தனைகள் பலித்த சந்தோஷத்தில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும், தீ மிதித்தும், பொங்கலிட்டும் தங்களது நேர்த்திக்கனைச் செலுத்திவிட்டுச் செல்கிறார்கள்.
இந்த தேவியின் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகரும் விஷேமானவர். இவரை பஞ்சம் தவிர்க்கும் பிள்ளையார் என்று சிறப்பிக்கிறார்கள். கடும் வறட்சியோ, பஞ்சமோ ஏற்பட்டால், ஸ்ரீவனதுர்கையம்மன் கோவிலுக்கு வந்து, இந்தப் பிள்ளையாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டுவிட்டு, அவரது விக்கிரகத்தை அப்படியே சாய்த்து வைத்துவிடுவார்கள்.
சில நாட்களில் மழை வெளுத்து வாங்கும். ஏரி குளங்கள் எல்லாம் நீர் நிரம்பி வழியும். பிறகு ஆலயத்துக்கு வந்து, விநாயகரை நிமிர்த்தி வைத்து, அவருக்கு வழிபட்டுச் செல்வார்கள். கோவிலுக்கு அருகில் ஒரு வேப்ப மரமும், புற்றும் உள்ளன. செவ்வாய், வெள்ளி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வணங்கி, புற்றுக்குப் பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால் நாக தோஷம் நீங்கி, நலமுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்து நடை பயணமாக அல்லது ஆட்டோ மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.

0 comments :
Post a Comment