background img

புதிய வரவு

மகிழ்ச்சி கூட்டணி, அதிர்ச்சி கூட்டணி: சுப.வீரபாண்டியன்

திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன்,

திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார். எதிர் அணியினருக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் தூளாக ஆக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. இது ஒரு புதிய போக்கு. பொதுவாக தேர்தல் நேரம் என்றால், கூட்டணியிலே எந்தெந்த கட்சியினர் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கு எந்த தொகுதி. எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் என்பதை அறிந்துகொள்பதிலேதான் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

ஆனால் இப்போதுதெல்லாம் திமுக தேர்தல் அறிக்கை எப்போது வருகிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு மக்களிடையே பெரும் ஆர்வம் இருக்கிறது. பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்த தேர்தல் அறிக்கையை நிதிநிலை அறிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. அரசு வெளியிட்டுள்ள ஆணை என்று மக்கள் பார்க்கிறார்கள். நம்பிக்கை கொடுக்கிற அளவுக்கு தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.

திமுக கூட்டணி எப்படி ஜனநாயகமாக இருக்கிறது. அந்த கூட்டணி எப்படி ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூறுகிறேன். திமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, கூட்டணியில் இருந்த அத்தனைபேரும் அதிர்ந்தார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தேமுதிக அதிர்ச்சி, சிபிஐ அதிர்சசி, சிபிஎம் அதிர்ச்சி என்று செய்திகள் வெளியாகின.

சரியாக சொல்லவேண்டும் என்றால் திமுக கூட்டணி மகிழ்ச்சி கூட்டணி. அந்த கூட்டணி அதிர்ச்சி கூட்டணி என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts