அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நேற்று அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ’’இந்த தேர்தலில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 1300 விண்ணப்பங்கள் வந்திருந்தன. வேறு கட்சிகளைச் சேர்ந்த சிலரும் அனுப்பியிருந்தார்கள். அந்த விண்ணப்பங்களை கண்டறிந்து நீக்கியதால்தான் வேட்பாளர் பட்டியல் தயாரிக்க தாமதம் ஏற்பட்டது.
இன்று 14 வேட்பாளர்கள் கொண்ட முதல்பட்டியலை வெளியிடுகிறேன். கடையநல்லூர் தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் போலி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். தோல்வி பயத்தால் இப்படி செய்திருக்கிறார்கள். அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கிறேன். சங்கரன்கோவில் தொகுதியில் பி.சுப்புலட்சுமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் கே.சாந்திபூசன், நாங்குனேரி தொகுதியில் எம்.சண்முகசுந்தரம், ராதாபுரம் தொகுதியில் ஆர்.மரகதவல்லி, அம்பாசமுத்திரம் தொகுதியில் குவைத்.எம்.குமார்,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எஸ்.ராஜா, கடையநல்லூர் தொகுதியில் எம்.பாலசுப்பிரமணியன், தென்காசி தொகுதியில் எஸ்.பரமசிவம், வாசுதேவநல்லூர் தொகுதியில் எஸ்.பிச்சைக்கனி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் சி.சங்கர், சாத்தூர் தொகுதியில் கே.எஸ்.வைரமுத்து, ராஜபாளையம் தொகுதியில் கே.சூரியமகாராஜா,
விருதுநகர் தொகுதியில் எஸ்.செந்தாமரை பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில், வேட்பாளர்கள் சுப்புலட்சுமியும், சங்கரும் கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும். அதில் 15 வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.
எங்கள் கட்சி, தென்மாவட்டங்களில் 40 தொகுதிகளில் நிற்க முடியும். நேரமில்லாத காரணத்தால் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் யாரை ஆதரிப்பது என்று ஓரிரு நாளில் அறிவிப்பேன். நிச்சயமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டோம்.
ஆள் பலம், பணம் பலத்தைக் காட்டி எங்களை மிரட்டுகிறார்கள். யாருடைய மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
எங்களுக்கு காந்தி போலவும் இருக்க தெரியும். சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்க தேவர் போலவும் இருக்க முடியும். நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எங்களை மிரட்டியவர்கள் பற்றி தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். தேர்தலில் மிரட்டல் இருக்கக்கூடாது. ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.
எங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் நான் போட்டியிடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை.
உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்வோம். சிவகாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்தும் ஓரிரு நாளில் அறிவிப்போம். 28-ந் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக அ.தி.மு.க. எங்களை மிகவும் துன்புறுத்தியது. ஆனால், கலைஞர் கருணாநிதிக்கு தாராள குணம். எல்லா கட்சியினரையும் மதித்து தொகுதிகளை தாராளமாக ஒதுக்கி கொடுத்துள்ளார்’’என்று கூறினார்.

0 comments :
Post a Comment