background img

புதிய வரவு

தமிழகத்தில் மனு தாக்கல் துவங்க இன்னும் 5 நாள் : இரு அணிகளிலும் கடைசி கட்ட பரபரப்பு

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்க இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு விஷயத்தில் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடைசி கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., அணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், பா.ம.க., 30 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மூன்று கட்சிகளுடன் தொகுதிகள் அடையாளம் காணும் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. காங்கிரஸ் ஐவர் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில், சில தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சிலர் தங்களது ஆதரவாளர்களுக்காக தி.மு.க.,விடம் கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் எழுந்துள்ளதால், பரபரப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அ.தி.மு.க., அணியிலும் நீண்ட இழுபறிக்கு பின், ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு எண்ணிக்கை தொடர்பான உடன்பாடு இன்று முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.அ.தி.மு.க., அணியில் ம.தி.மு.க., 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் 18 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் 15 தொகுதிகளும் கேட்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தரப்பில் ம.தி.மு.க.,வுக்கு - 13, மார்க்சிஸ்டுக்கு - 11, இந்திய கம்யூனிஸ்டுக்கு - 9 என்ற அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அ.தி.மு.க., அணியில் தொகுதிப் பங்கீடு இறுதி வடிவம் பெறாமல் இழுபறியாக இருந்தது.

இந்நிலையில், மூன்று கட்சிகளிடமும் அ.தி.மு.க., நடத்திய இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க.,வுக்கு 18 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டு மூன்று கட்சிகளும் இன்று, தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையöழுத்திட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று தசமி திதி என்பதையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம் என தெரிகிறது.

பணப் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் விளைவாக, தமிழகத்தில் தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருக்கும் வகையில் தேர்தல் அட்டவணையை தயாரித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்து, தொகுதிகளை அடையாளம் கண்டு, வேட்பாளர்களை முடிவு செய்து அவர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய முடுக்கி விட வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கான திட்டத்தையும் வகுக்க வேண்டும்.

இவ்வளவு பணிகள் எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வரும் 19ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. இருந்தாலும், வேட்பு மனு தாக்கல் துவங்க, இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இவ்வளவு பணிகளையும் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளுங்கட்சி கூட்டணியும், எதிர்க்கட்சி கூட்டணியும் உள்ளன. இதனால், கூட்டணி தலைவர்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் கடைசி கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts